12 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றிய டைட்டானிக் கதாநாயகி! மனம் உருகி அழுத தாய்


ஒரு பிரபலம் உதவி செய்வதை விட அரசாங்கம் உதவ வேண்டும் என்பதை நான் விரும்பினேன் என கேட் வின்ஸ்லெட் சிறுமியின் தாயிடம் கூறினார்

தனது மகளுக்காக மருத்துவ சாதனத்தை இயக்குவதற்கும், வீட்டை சூடாக வைத்துக் கொள்வதற்கும் கரோலினுக்கு ஆண்டுக்கு 6,500 பவுண்ட்கள் செலவாகிறது

ஸ்கொட்லாந்து சிறுமியின் உயிரை காப்பாற்ற பிரபல நடிகை கேட் வின்ஸ்லெட் மிகப்பெரிய தொகை கொடுத்து உதவியுள்ளார்.

ஸ்கொட்லாந்தின் டில்லிகோல்ட்ரியைச் சேர்ந்தவர் கரோலின் ஹண்டர். இவரது 12 வயது மகள் பெருமூளை வாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் மகளின் சிகிச்சைக்கு மிகப்பெரிய அளவில் பண உதவி கரோலினுக்கு தேவைப்பட்டுள்ளது.

12 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றிய டைட்டானிக் கதாநாயகி! மனம் உருகி அழுத தாய் | Actress Kate Winslet Huge Help To 12 Year Girl

இந்த நிலையில் ஊடகம் வாயிலாக இவர்களது போராட்டத்தை அறிந்த டைட்டானிக் புகழ் நடிகை கேட் வின்ஸ்லெட், 17,000 பவுண்ட்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

Kate Winslet

அத்துடன் கரோலின் குடும்பத்தை தொடர்புகொண்டு அவரது மகள் விரைவில் குணமடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இதனால் கரோலின் ஹண்டர் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தார்.

12 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றிய டைட்டானிக் கதாநாயகி! மனம் உருகி அழுத தாய் | Actress Kate Winslet Huge Help To 12 Year Girl

அவர், ‘ஒரு குடும்பமாக எங்கள் பயணம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருந்தது, என் வாழ்க்கை இந்த கட்டத்தில் முடிந்ததாக உணர்ந்தேன்.

பணத்தைப் பற்றி கேள்விப்பட்டபோது நான் கண்ணீர் விட்டு அழுதேன். அது உண்மையல்ல என்று நினைத்தேன். நான் இது உண்மையா என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்’ என தெரிவித்தார்.  

12 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றிய டைட்டானிக் கதாநாயகி! மனம் உருகி அழுத தாய் | Actress Kate Winslet Huge Help To 12 Year Girl

Kate Winslet

Getty ImagesSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.