நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் காணொலி வாயிலாக ஆலோசனை

ஈரோடு:  நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2024ம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் தி.மு.க. ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. வாக்குச்சவாடி முகவர்களுடன் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக கலந்துரையாடினார். இதில், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள்(பிஎல்ஏ2) பங்கேற்க, ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மகாலில் தி.மு.க. தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி செய்திருந்தார்.

கூட்டத்தில், தி.மு.க.துணை பொதுசெயலாளர் அந்தியூர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் பழனிசாமி, துணை செயலாளர் செல்லப்பொன்னி, தலைமை செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, பகுதி செயலாளர்கள் முருகேசன், அக்னிசந்துரு, மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் சசிக்குமார், குறிஞ்சி தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு சென்னிமலை சாலையில் உள்ள செந்தூர் மகாலில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர்கள் கே.பி.சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோபி : கோபி தொகுதிக்கான கூட்டம், மொடச்சூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்சாமி தலைமையில் பொருளாளர் கொங்கர்பாளையம் கே.கே.சண்முகம், கோபி நகர செயலாளரும், நகராட்சி தலைவருமான நாகராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர்.செந்தில்நாதன், மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சிறுவலூர் முருகன் (கோபி வடக்கு), செந்தில்குமார் (நம்பியூர்), கொளப்பலூர் பேரூராட்சி தலைவர் அன்பரசு ஆறுமுகம், மாவட்ட சிறுபான்மைபிரிவு துணைத்தலைவர் அல்லாபிச்சை, பொதுக்குழு உறுப்பினர் சிறுவலூர் வெள்ளியங்கிரி, கோபி நகர இளைஞரணி அமைப்பாளர் மற்றும் கவுன்சிலர் விஜய் கருப்புசாமி, நம்பியூர் நகர செயலாளர் ஆனந்தகுமார், ஒன்றிய துணைச்செயலாளர் கோட்டுப்புள்ளாம்பாளையம் மூர்த்தி, மொடச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார், மாவட்ட பிரதிநிதி வெள்ளாளபாளையம் சீனிவாசன், அபிராமி வெங்கிடு, நம்பியூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் கீதா முரளி,  லக்கம்பட்டி பேரூர் கழக செயலாளர் வேலவன், அபிராமி வெங்கிடு, கோபி நகர ஐடி விங் நிர்வாகி ஜூனாயத்,நகர துணைச்செயலாளர் மெய்யழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.