பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மஹேஸ்வரி; எவ்வளவு செட்டில்மெண்ட் ஆச்சி?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.  கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் -6 நிகழ்ச்சியிலிருந்து இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.  முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து அந்த வாரம் டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைந்த வாக்குகளுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.  அதன்பின்னர் கடந்த வாரம் அசல் கோளாறு அவர் செய்த சில கோளாறான செயல்களால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து வாராவாரம் நடக்கும் வெளியேற்று படலத்தில் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் விக்ரமன், அசீம், ஆயீஷா, மஹேஸ்வரி, ராம், தனலட்சுமி, ADK போன்ற போட்டியாளர்கள் உள்ளனர்.  இதிலிருந்து யார் அந்த ஒரு நபர் பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போகிறார் என்று தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் விஜே மஹேஸ்வரி வெளியேறியுள்ளார். ஷாந்தி, அசல் கோளார், ஷெரினாவை தொடர்ந்து நான்காவது போட்டியாளராக மஹேஸ்வரி எவிக்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே விஜே மஹேஸ்வரியின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி உள்ளது, அத்துடன் தற்போது வரை எவ்வளவு செட்டில்மெண்ட் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான செய்தி வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் விஜே மஹேஸ்வரி ஒரு நாளைக்கு ரூ. 23 ஆயிரம் வரை சம்பளமாக வாங்குகிறார் என்றும், தற்போது 35 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த சுமார் ரூ. 8 லட்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.