மாணவர்களுடன் துபாயில் மியூசியம் ஆப் தி பியூச்சர்-ரை பார்வையிட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்… வீடியோ

எதிர்கால விண்வெளி தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழல், உயிர் பொறியியல் உள்ளிட்டவை குறித்த அருங்காட்சியகத்திற்கு மாணவர்களை இன்று அழைத்துச் சென்றுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

இணையவழி வினாடி-வினா மூலம் தேர்வு செய்யப்பட்ட 67 அரசுப் பள்ளி மாணவர்களுடன் துபாய்க்கு நான்கு நாட்கள் கல்வி சுற்றுலா சென்றுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு பாதுகாவலராக மட்டுமன்றி தாயாகவும் தந்தையாகவும் இருந்து கவனித்து வருகிறார்.

 

துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் உள்ள அருங்காட்சியகங்கள், வழிபாட்டு தலங்கள், அரண்மனை, புத்தக கண்காட்சி உள்ளிட்ட முக்கிய இடங்களை சுற்றிப்பார்த்து வருகின்றனர்.

இன்று அவர்கள் துபாயில் உள்ள எதிர்கால தொழில்நுட்பம் குறித்த மியூசியம் ஆப் தி பியூச்சர்-ரை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.

சி.எஸ்.ஆர். (Corporate Social Responsibility – CSR) நிதி பங்களிப்பு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த சுற்றுப்பயணத்துக்கு மத்திய மாநில அரசுகளின் அனுமதியோடு மாணவர்களுடன் 5 ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.