விஜய் படத்தை ட்ரோல் செய்துவிட்டு விஜய்க்கே கதை சொன்ன இயக்குனர்!

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் தனது இரண்டு படைப்புகளின் மூலம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.  குறும்படங்கள் இயக்கி கவனம் ஈர்த்ததன் மூலம் ஜெயம் ரவியை வைத்து ‘கோமாளி’ படத்தை இயக்கி அதில் வெற்றிகண்டார், தற்போது ‘லவ் டுடே‘ படத்தின் மூலம் ரசிகர்களின் பாராட்டை பெற்றிருக்கிறார்.  இன்றைய கால காதலர்களின் செயல்களை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் அமைந்திருந்தது. காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட் என படம் பலரையும் கட்டிப்போட்டது.  இந்த படத்தை பார்த்துவிட்டு படத்தில் வரும் சம்பவம் போல நம் வாழ்விலும் நடந்துவிட்டால் என்னாகுமோ என்று பதறிய சில காதலர்களும் உள்ளனர்.  இன்றைய காலகட்ட காதலர்களுக்கு தகுந்த மெசேஜை கூறும் விதமாக வெளிவந்துள்ள இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றதோடு வசூலிலும் வெற்றி கண்டு வருகிறது.  

‘லவ் டுடே’ படத்தின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்த படத்தை பிரதீப் ரங்கநாதனே இயக்கி, எழுதி நடித்திருக்கிறார்.  இவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டு மழை குவிந்து கொண்டிருக்கும் சமயத்தில் இவரை சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.  விஜய் நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’ படத்தின் டைட்டிலை தான் பிரதீப் தன் படத்திற்கும் வைத்திருக்கிறார் மற்றும் இதற்காக டைட்டில் கார்டில் விஜக்கு நன்றியும் தெரிவித்து பெருமைப்படுத்தி இருக்கிறார்.  மேலும் விஜய்க்கு ஒரு கதை சொல்லியிருப்பதாகவும், அவரை வைத்து படம் பண்ண விரும்புவதாகவும் சில பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.  அப்படி இருக்கையில் இவரை விஜய் ரசிகர்கள் பாராட்ட தானே வேண்டும் எதற்காக இப்படி சமூக வலைத்தளங்களில் இவரை வெச்சி செய்கிறார்கள் என்று பார்த்தால் சில வருடங்களுக்கு முன்னர் இவர் செய்த செயல் அப்படி.

pradeep

இயக்குனர் பிரதீப் அப்படி என்னதான் செய்தார் என்றால் கடந்த 2014ம் ஆண்டு விஜய் படத்தை கிண்டலடித்து இவர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார், இது தற்போது ட்ரெண்டாகியுள்ளது இதை வைத்து தான் விஜய் ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.  ‘ஜில்லா’ படத்தில் விஜய்யின் வாய்ஸ் மாடுலேஷனை பற்றி ஒருவர் பெருமையாக ட்வீட் செய்ததற்கு, பிரதீப் அதற்கு சுறா-2 படத்தின் டப்பிங் போன்று ‘ஜில்லா’ படம் இருந்தது என்று கூறி கிண்டல் செய்துள்ளார்.  அடுத்ததாக மற்றொருவர் ‘லிங்கா’ படத்திற்கு முதல் நாளே டிக்கெட் கிடைத்துவிட்டது, ஆனால் ‘கத்தி’ படம் வெளியாகி இத்தனை நாளாகியும் டிக்கெட் கிடைக்கவில்லை என கூறியதற்கு பிரதீப் ‘லிங்கா’ படத்திற்கு மூன்று நாட்கள் ஆகியும் டிக்கெட் கிடைக்கவில்லை, ஆனால் ‘கத்தி’ படத்திற்கு முதல் நாளே ஈசியாக டிக்கெட் கிடைத்துவிட்டது என்று கூறி கிண்டல் செய்துள்ளார்.  தற்போது இவரின் நக்கலான கருத்துக்களை எடுத்து விஜய் ரசிகர்கள் இவரை திட்டி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.