
24 மணி நேரத்தில் 78 (Pubs) பப்களுக்குச் சென்று, ஆஸ்திரேலிய இளைஞர் டி-வில்லியர்ஸ் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். முன்னதாக பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் நாதன் 24 மணி நேரத்தில் இங்கிலாந்தில் 67 பப்களுக்குச் சென்றிருந்தார்.

கொலம்பியாவில் Ouija Board விளையாடிய 11 குழந்தைகள் பள்ளியில் மயங்கி விழுந்தனர். இருப்பினும், இது Food Poison காரணமாகத்தான் என்று மருத்துவ அறிக்கை சொல்கிறது.

குளிர்பான பிராண்டான பெப்சி-யின் பெயரில் ட்விட்டரில் இருந்த ஃபேக் அக்கவுன்ட்டில், `கோக் சிறந்தது’ எனப் பதிவிடப்பட்டது பேசுபொருளாகியிருக்கிறது.

தாய்லாந்தில் வவ்வால் சூப் செய்து யூடியூப்-ல் வீடியோ வெளியிட்ட ஃபோஞ்சனோக் ஸ்ரீசுனக்லுவா என்ற பெண் கைதுசெய்யப்பட்டார்.

பிரிட்டன் மன்னர் சார்லஸ், ராணி கமீலா மீது முட்டை வீசிய இளைஞருக்கு, வாழ்நாளில் முட்டை சாப்பிடக் கூடாது என்ற நூதன தண்டனை வழங்கப்பட்டது.

வடக்கு எகிப்த்-ல் பேருந்து கவிழ்ந்ததில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பித்தனர்.

இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மார்கல், செல்வாக்குமிக்க அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற பட்டியலில் மன்னர் சார்லஸை முந்தினார்.

இரான் அரசின் ஹிஜாப் கட்டாயத்திற்கு எதிரானப் போராட்டங்களில் இதுவரை 326 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு மனித உரிமை அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘தி டெர்மினல்’ படம் எடுக்க முன்னோடியாக இருந்து, 18 வருடங்களாக பாரிஸ் விமான நிலையத்தில் வாழ்ந்து வந்த மெஹ்ரான் கரிமி என்ற இரானியர் உயிரிழந்தார்.

எகிப்தில் நடக்கும் பருவநிலை மாற்றத்திற்கான சந்திப்பில் காலநிலை மாற்றத்திற்கான தொகையைச் செலுத்தக் கோரி நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.