19 வயதுகுட்பட்டவர்களுக்கான உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

துபாய்:
19 வயதுகுட்பட்டவர்களுக்கான உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை 2024ம் ஆண்டு இலங்கையிலும், 2026ம் ஆண்டு ஜிம்பாப்வே & நமிபியா நாட்டில் நடக்கின்றன. 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை 2025ம் ஆண்டு மலேசியா மற்றும் தாய்லாந்திலும், 2027ம் ஆண்டு வங்கதேசம் & நேபாளில் நடக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.