வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில், சமர்ப்பிப்பதற்கு தேவையான அனைத்து……..

வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  பாராளுமன்ற செயலாளர் நாயகம் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டின் நலன் மற்றும் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட முன்மொழிவுகள் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
 
பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தொடர்ச்சியான நடுத்தர மற்றும் நீண்ட கால முன்மொழிவுகள் இதில் உள்ளன.
 
இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் பொதுச் சேவையை திறம்படச் செய்யவும், பொதுச் சேவைப் பணிகளை டிஜிட்டல் மயமாக்கவும், தனியாருக்குச் சாதகமான முதலீட்டு வசதிகளை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இம்முறை சமூகப் பாதுகாப்பிற்காக அதிகூடிய தொகையான 572 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.
 
இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் மொத்தச் செலவு ஏழாயிரத்து 885 பில்லியன் ரூபாவாகும்
 
கடந்த வருடத்தில் மதிப்பிடப்பட்ட ஆறாயிரத்து நூறு பில்லியன் ரூபாவை விட ஆயிரத்து 785 பில்லியன் ரூபா அதிகரிப்பு என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டம் 2023 – ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்
 
வரவு செலவுத் திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு)
2022.11.14 (திங்கட்கிழமை)
(பி.ப. 1.30 மணிக்கு)
 
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் 2022.11.15 (செவ்வாய்க்கிழமை)
 
(7 ஒதுக்கப்பட்ட நாட்கள்) 2022.11.16 (புதன்கிழமை)
  17.11.2022 (வியாழக்கிழமை)
  2022.11.18 (வெள்ளிக்கிழமை)
  2022.11.19 (சனிக்கிழமை)
  2022.11.21 (திங்கட்கிழமை)
(இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 5.00 மணிக்கு) 2022.11.22 (செவ்வாய்க்கிழமை)
குழுநிலை விவாதம் 2022.11.23 (புதன்கிழமை)
(13 ஒதுக்கப்பட்ட நாட்கள்) 24.11.2022 (வியாழக்கிழமை)
  2022.11.25 (வெள்ளிக்கிழமை)
  26.11.2022 (சனிக்கிழமை)
  2022.11.28 (திங்கட்கிழமை)
  2022.11.29 (செவ்வாய்க்கிழமை)
  2022.11.30 (புதன்கிழமை)
  2022.12.01 (வியாழக்கிழமை)
  2022.12.02 (வெள்ளிக்கிழமை)
  2022.12.03 (சனிக்கிழமை)
  2022.12.05 (திங்கட்கிழமை)
  2022.12.06 (செவ்வாய்க்கிழமை)
 
(மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 5.00 மணிக்கு) 2022.12.08 (வியாழக்கிழமை)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.