விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் ஷாருக்கானை காக்க வைத்த அதிகாரிகள்

நடிகர் ஷாருக்கான் வெளிநாட்டு விமான நிலையங்களில் ஓரிருமுறை விசாரணை மற்றும் சோதனை என்கிற பெயரில் காக்க வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார் என்கிற செய்தி பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதேசமயம் நேற்று முன்தினம் துபாயிலிருந்து தனது குழுவினருடன் மும்பை விமான நிலையம் வந்திறங்கிய ஷாருக்கான் சுங்க அதிகாரிகளால் ஒருமணி நேரம் வரை காத்திருக்க வைக்கப்பட்டார். காரணம் ஷாருக்கானுடன் பயணித்தவர்களில் அவரது பாதுகாவலரான ரவிசங்கர் சிங் என்பவர் கொண்டுவந்த லக்கேஜில் 17.86 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 6 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் இருந்தன. அதற்கான சுங்கவரி செலுத்தப்படவில்லை.

அதேசமயம் இவர்கள் நள்ளிரவு 12 மணி அளவில் மும்பை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியதால் அந்த சமயத்தில் சுங்க வரி செலுத்தும் கவுன்ட்டர்கள் செயல்படாமல் மூடியிருந்தன. இதனால் ஒரு மணி நேரம் தாமதமான நிலையில் ஷாருக்கானின் பாதுகாவலர் தவிர மற்ற 5 பேரையும் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அதிகாலையில் கவுன்ட்டர்கள் செயல்பட துவங்கிய பின்னர் சுங்க வரியாக சுமார் 6.88 லட்சம் ரூபாய் செலுத்திவிட்டு ஷாருக்கானின் பாதுகாவலர் ரவிசங்கர் சிங் அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்த தகவல் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.