பிறந்தநாளில் மன்னர் சார்லசுக்கு கிடைத்துள்ள மோசமான செய்தி


பிரித்தானிய மன்னர் சார்லஸ் இன்று தனது 74ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

மகிழ்ச்சி ஒரு பக்கம் வருத்தம் ஒருபக்கம்

பிரித்தானிய மன்னரானபிறகு இது சார்லஸ் கொண்டாடும் முதல் பிறந்த நாள் ஆகும்.

ஒருபக்கம், மன்னருக்கு பிறந்தநாள் என்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், மறுபக்கம் விமர்சகர்களோ, அவருக்கு வயதாகிக்கொண்டே செல்வதால் அவர் குறுகிய காலமே ஆட்சி செய்யமுடியும் என்று கவலை தெரிவித்துள்ளார்கள்.

பிறந்தநாளில் மன்னர் சார்லசுக்கு கிடைத்துள்ள மோசமான செய்தி | Bad News For King Charles On His Birthday

பிறந்தநாளில் கிடைத்த ஏமாற்றம்

இந்நிலையில், பிறந்தநாளன்றே மன்னருக்கு ஒரு மோசமான செய்தியும் கிடைத்துள்ளது.

அது என்னவென்றால், இணையத்தில் அதிகம் தேடப்படும் ராஜ குடும்பத்தவர் யார் என Financial World என்னும் ஊடகம் ஆய்வு ஒன்று மேற்கொண்டது. இன்னொரு வகையில் கூறினால், மக்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ரஜ குடும்ப உறுப்பினர் யார் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பிறந்தநாளில் மன்னர் சார்லசுக்கு கிடைத்துள்ள மோசமான செய்தி | Bad News For King Charles On His Birthday

அந்த ஆய்வில் இளவரசர் ஹரியும், அவரது மனைவியான மேகனும் மன்னரை முந்திவிட்டார்கள் என்பதுதான் சோகமான செய்தி.

உலகம் முழுவதிலுமாக மாதம் ஒன்றிற்கு 4.5மில்லியன் முறை தேடப்பட்டிருக்கிறார் மேகன். அவர் மக்கள் மீது அதிக தாக்கம் கொண்ட ராஜ குடும்பம் உறுப்பினர் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார், ஹரியோ, 1.4 மில்லியன் முறை கூகுளில் தேடப்பட்டிருக்கிறார்.

ஆனால், மன்னர் சார்ல்ஸ் 1,104,000 முறை மட்டுமே இணையத்தில் தேடப்பட்டிருக்கிறார். ஆக, மக்கள் மீது அதிக தாக்கம் கொண்ட ராஜ குடும்பம் உறுப்பினர் பட்டியலில் மன்னர் சார்லசுக்கு ஏழாவது இடமே கிடைத்துள்ளது.
 





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.