டெல்லி: Living together-ல் இருந்த ஷர்தா என்ற பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதால், காதலன் அஃப்தாப் அமீன் 35 துண்டுகளாக வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசில் சிக்காமல் இருக்க 18 நாட்களாக, வெட்டப்பட்ட துண்டுகளை பல்வேறு இடங்களில் வீசி அப்புறப்படுத்தியுள்ளார்.
