திருமணங்களில் மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் கவனத்தைப் பெறுவதில்லை. மாறாக மாப்பிள்ளையின் நண்பர்கள் செய்யும் அலப்பறைகள் வெகுவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடுகின்றன.

திருமணத்திற்குப் பின் கறாராக அக்ரிமென்ட் போட்டு வித்தியாசமான கண்டிஷன்களோடு திருமணங்கள் நடைபெறுவது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சிகாகோ மிச்சிகன் அவென்யூவில் நடைபெற்ற இந்திய ஜோடியின் திருமணத்தில், உடை சார்ந்த பாகுபாடுகளை உடைத்து அவர்களின் நண்பர்கள் செய்த செயல் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
திருமணத்தின்போது, மணமகன் காத்திருக்க, அவரின் அந்நாட்டு நண்பர்கள் சேலை அணிந்து பொட்டு வைத்துக் கொண்டு வந்து, சர்ப்ரைஸ் கொடுக்க, மணமகளுக்காகக் காத்திருந்தவர்கள் திரும்பிப் பார்த்து, ஆச்சர்யமடைந்து வயிறு வலிக்கச் சிரித்து இருவரையும் அணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வை, சிகாகோவில் உள்ள திருமண வீடியோக்களை எடுப்பவர், பாராகான்பிலிம்ஸ் (Paraagonfilms) என்ற தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புடவை கட்டப்படுவது முதல், அவர்கள் நடந்து சென்று மணமகனை அடையும் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோவாக எடுத்துப் பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
தன்னுடைய நண்பனின் திருமணத்தை அழகாக்கிய அந்நபர்களுக்குப் பாராட்டுகளும், திருமண ஜோடிகளுக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.