டெல்லியை உலுக்கிய இளைஞரின் கொடூரம்… இணையத்தில் தேடிய அந்த முக்கிய தரவுகள்: வெளிவரும் புதிய தகவல்


இந்திய தலைநகர் டெல்லியை உலுக்கிய இளம்பெண் படுகொலை வழக்கில், முக்கிய குற்றவாளி தமது காதலியை படுகொலை செய்த பின்னர் இணையத்தில் தகவல் திரட்டியது அம்பலமாகியுள்ளது.

இணையத்தில் தேடிய தரவுகள்

குறித்த நபர், இரத்தத்தை சுத்தம் செய்யும் வழிகள் மற்றும் உடற்கூறியல் உள்ளிட்ட தரவுகளை இணையத்தில் வாசித்துள்ளார்.
மே 18ம் திகதி தமது காதலியை கொலை செய்த பின்னர், அவரது உடலை மறைவு செய்யும் பொருட்டு, உடற்கூறியல் தொடர்பாக வாசித்து தெரிந்து கொண்டதாகவும், இதனால் அவரது உடலை பல துண்டுகளாக வெட்ட தமக்கு அது உதவியாக இருந்தது என பொலிஸ் விசாரணையில் அஃப்தாப் அமீன் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

டெல்லியை உலுக்கிய இளைஞரின் கொடூரம்... இணையத்தில் தேடிய அந்த முக்கிய தரவுகள்: வெளிவரும் புதிய தகவல் | Man Who Killed Girlfriend Search History

@ FPJ

மட்டுமின்றி, உடலை வெட்டுவதற்காக மருத்துவர்கள் பயன்படுத்தும் கருவிகளை அவரது குடியிருப்பில் இருந்து பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
6 மாதங்களுக்கு முன்னர் நடந்த இந்த படுகொலை தொடர்பான விசாரணையை பொலிசார் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதுடன், குற்றவாளியை கைதும் செய்துள்ளனர்.

டெல்லியின் பல பகுதிகளில்

26 வயதான ஷ்ரத்தா வாக்கர் என்பவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி, டெல்லியின் பல பகுதிகளில் மறைவு செய்துள்ளார்.
ஷ்ரத்தா வாக்கர் தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையிலேயே, சனிக்கிழமை அஃப்தாப் அமீன் பூனவல்லா கைதாகியுள்ளார்.

டெல்லியை உலுக்கிய இளைஞரின் கொடூரம்... இணையத்தில் தேடிய அந்த முக்கிய தரவுகள்: வெளிவரும் புதிய தகவல் | Man Who Killed Girlfriend Search History

Photo Credits: NDTV

டேட்டிங் செயலி ஊடாக அறிமுகமான அஃப்தாப் அமீன் பூனவல்லா மற்றும் ஷ்ரத்தா வாக்கர் ஜோடி, டெல்லியில் வாடகை குடியிருப்பு ஒன்றில் குடியேறியுள்ளனர்.
நவம்பர் 10ம் திகதி தமது மகள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என கூறி ஷ்ரத்தாவின் தந்தை பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

மூன்று ஆண்டுகள் ஒன்றாக

பொலிசார் கூறுகையில், கொலைக்கு பின்னர் தரையில் சிந்திய இரத்தத்தை சுத்தம் செய்ய ரசாயனங்களை இணையம் ஊடாக தேடி தெரிந்து கொண்டுள்ளார்.
குளியலறையில் ஒரு குளிர்சாத பெட்டிக்குள் உடலை சேமித்து வைத்திருந்துள்ளார்.

டெல்லியை உலுக்கிய இளைஞரின் கொடூரம்... இணையத்தில் தேடிய அந்த முக்கிய தரவுகள்: வெளிவரும் புதிய தகவல் | Man Who Killed Girlfriend Search History

Credit: Twitter

டேட்டிங் செயலி ஊடாக மும்பையில் வைத்து அறிமுகமான இருவரும் பின்னர் டெல்லிக்கு இடம்பெயர்ந்து, மூன்று ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.
ஷ்ரத்தா திருமணத்திற்கு கட்டாயப்படுத்தவே, அதற்கு ஒப்புக்கொள்ளாத அஃப்தாப், ஒரு கட்டத்தில் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

பின்னர் உடலை 35 துண்டுகளாக வெட்டிய அவர், மொத்தம் 18 நாட்களில் டெல்லியின் பல பகுதிகளில் உடல் பாகங்களை மறைவு செய்துள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.