பல்கலை., செயல்பாட்டின் அரசு தலையீடு அதிகம்: கேரள கவர்னர்| Dinamalar

புதுடில்லி: பல்கலைக்கழகங்களின் அன்றாட செயல்பாட்டின் அரசாங்கம் அதிகமாக தலையிடுகிறது. அதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதாரணங்களை என்னால் கொடுக்க முடியும் என கேரள கவர்னர் ஆரிப் கான் கூறினார்.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் கேரள உயர்கல்வித்துறையில் கவர்னர் தலையிடுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆளும் இடது ஜனநாயக முன்னணி கட்சிகள் இன்று(நவ.,15) திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனுக்கு மாபெரும் கண்டன பேரணியை நடத்தின.

இந்நிலையில், டில்லியில் கேரளா கவர்னர் ஆரிப் கான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அரசாங்கத்தின் வேலையில் நான் தலையிட முயற்சித்ததற்கு ஒரு உதாரணம் சொல்லுங்கள், அந்த நேரத்தில் நான் ராஜினாமா செய்வேன். நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல முடியும், நான் அழுத்தம் கொடுக்கக்கூடிய நபர் அல்ல என்ற முடிவுக்கு நீங்கள் வருவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. அதேபோல் நான் அழுத்தங்களுக்கு அடி பணியும் நபர் அல்ல.

latest tamil news

பல்கலைக்கழகங்களின் அன்றாட செயல்பாட்டின் அரசாங்கம் அதிகம் தலையீடுகிறது. அதற்கு ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட உதாரணங்களை என்னால் கொடுக்க முடியும். கடந்த ஆண்டு வரை நீங்கள் ஏன் பிரச்சினையை எழுப்பவில்லை.

கேரளாவில் 13 பல்கலைக்கழகங்கள் இருந்தன, அங்கு அனைத்து நியமனங்களும் சட்டவிரோதமானது? சட்டத்தை மீறி 100% பணி நியமனங்கள் நடந்த மாநிலம் வேறு ஏதேனும் உள்ளதா?. பல்கலைக் கழகங்கள் கட்சித் தொண்டர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் ஏகாதிபத்தியமாக மாறிவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.