பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 8ந்தேதி தொடக்கம்! அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு அட்டவணை வெளியீடு…

சென்னை:  அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான நவம்பர்/டிசம்பர் செமஸ்டர் தேர்வு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் தங்களின் தேர்வு அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளுக்கான நவம்பர் / டிசம்பர் செமஸ்டர் தேர்வு டிசம்பர் 8ம் தேதி முதல் தொடங்குகிறது. 3வது, 5வது, 7வது செமஸ்டர் தேர்வுகளுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.  நவம்பர்/டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகள் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

அதன்படி, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., ஆகிய வகுப்புகளுக்கான 3வது, 5வது, 7வது செமஸ்டர் தேர்வு அட்டவணை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைய முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம்.

டிசம்பர் 8  ஆம் தேதி முதல் காலை, மாலை என இரு வேளைகளிலும் தேர்வுகள் நடத்தப்படும் வகையில் தேர்வு அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது என்று தமிழக உயர்கல்வித் துறையால் அறிவிக்கப்பட்ட நிலையில் பாடவாரியாக தேர்வு அட்டவணையை தேர்வர்கள் https://aucoe.annauniv.edu/timetable.php என்ற இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.