என்னப்பா சொல்றீங்க..!! 230 பெண்களை வரன் பார்க்க, குவிந்த 14,000 மணமகன்கள்..!

நம் வீட்டில் பொதுவாக நடக்கும் சம்பவம் இது. திருமண வயதை எட்டுவதற்கு முன்பே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேட ஆரம்பித்துவிடுவார்கள்.நம் வீட்டில் திருமண வயதில் ஒருவர் இருந்தால் போதும், ‘அடுத்து உனக்குதான் கல்யாணம் !’ என்று சொல்லி சொல்லியே உசுப்பேற்றுவார்கள். இது தவிர, வீட்டில் ஜாதகம் பார்க்கும் படலங்களும் ஒருபக்கம் நடந்தேறும்.அப்படிப்பட்ட நிலையில் 230 பெண்களை மணக்க 14 ஆயிரம் விண்ணப்பித்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.

மண்டியா மாவட்டத்தில் ஆதிசுஞ்னகிரி மடத்தின் சார்பில், ஒரு பிரிவு சமுதாயத்தினருக்கான கல்யாண வரன் பார்க்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 230 பெண்கள் மணமகன் தேவை என இந்த வரன் பார்க்கும் நிகழ்வில் பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, இந்த பெண்களை மணக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என கேட்டு கொள்ளப்பட்டது.

இந்நிலையில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதற்காக விண்ணப்பித்துள்ளனர். 230 பெண்களை மணக்க, 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.