சுண்ணாம்பில் இவ்வளவு விஷயம் இருக்கா..? இது தெரியாம போச்சே..!!

சில காலங்களுக்கு முன் ஒவ்வொரு வீட்டிலும் சுண்ணாம்பு இருக்கும். வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஒரு பாட்டி வெற்றிலை மென்று கொண்டேயிருக்கும்.

இந்தச் சுண்ணாம்பில் ஏராளமான கால்சியம் நிறைந்திருக்கிறது. எலும்புகளைப் பலப்படுத்தும். செரிமான சக்தியை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே உண்டு பண்ணும் ஆற்றல் வாய்ந்தது. இதை தனியாக சாப்பிட முடியாது என்றாலும் சில பொருட்களுடன் சேர்ந்து சாப்பிட உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்கச் செய்யும்.

ஒரு டீஸ்பூன் தேனுடன் ஊசி முனையளவு சுண்ணாம்பு சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்க மந்தமான குழந்தைகள் சுறுசுறுப்படையும். எலும்புகளைப் பலப்படுத்தி சுறுசுறுப்பாக்கும்.

வயது வந்த பெண்களுக்கு ஆரோக்கியமான கருமுட்டை உருவாக சுண்ணாம்பு காரணமாக உள்ளது. படிக்கும் மாணவர்களுக்கு தயிரில் ஒரு கோதுமை அளவு சுண்ணாம்பு சேர்த்து கொடுக்க நினைவாற்றல் பெருகும்.

மூளையைச் சுறுசுறுப்பாக்கும்.நீர் மோர், ஜூஸ், தண்ணீர் என எவற்றில் கலந்து கொடுத்தாலும் நல்ல பலன் கிடக்கும். கர்ப்பிணிகளுக்கு அதிக கால்சியம் தேவையைப் பூர்த்தி செய்ய மாதுளம் பழம் சாற்றில், ஒரு கோதுமையளவு சுண்ணாம்பு சேர்த்து தினமும் குடிக்க கொடுக்கலாம்.

கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் கடையில் கால்சியம் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறோம். எந்த வகையான மாத்திரை என்றாலும் கூட பக்கவிளைவுகளை தரும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ரத்தக் குறைபாடு, அதிக ரத்தப் போக்கு, உடல்வலி, வயிற்று வலி, குறைந்த ரத்தப் போக்கு, உடல் உஷ்ணம், சோர்வு என எல்லாவற்றுக்குமே சுண்ணாம்பு அருமருந்து .கரும்பு ஜூஸ், ஆரஞ்சு பழரசம், மாதுளம் பழச்சாறு என எதனுடனும் கோதுமையளவு சுண்ணாம்பை கலந்து குடித்து வர அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.

பற்கள், ஈறுகளில் பிரச்சினை இருந்தால் வெற்றிலை, துளசியுடன் ஒரு துளி சுண்ணாம்பு கலந்து சாப்பிடலாம்.துளி சுண்ணாம்பு சேர்த்த் நீரில் தினமும் வாய் கொப்பளித்து வர பல் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.

தோள்பட்டை வலி, மூட்டு வலி இவற்றிற்கு சிறிது சுண்ணாம்பை துளசி சாற்றில் கலந்து தேய்த்துவிட்டால் வலி மறையும். விஷப் பூச்சிகள் கடி வாயில் சுண்ணாம்பு வைத்தால் விஷத்தை முறிக்கும்.

வேர்க்குரு, கொசுக்கடியிலிருந்து தப்பிக்க நல்லெண்ணெய்யுடன் சுண்ணாம்பு சேர்த்து உடலில் பூசிவரலாம்.

பல்லில் கூச்சம் உள்ளவர்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது உப்பு, சுண்ணாம்பு கலந்து கொப்பளித்து வந்தால் பல் கூச்சம் மறையும். பல்லில் ரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் போன்றவைகளுக்கும் இது நல்ல மருந்து.

வெற்றிலையில், தேன் தடவி, கிராம்புடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து மென்று சாற்றை தொண்டையில் பரவவிட்டால் தொண்டை வளம் பெறுவதோடு அந்தச் சாறு நுரையீரல் முழுவதும் பரவி சளி தொந்தரவை நீக்கும்.

இவை அனைத்திற்கும் கடைகளில் விற்கும் கலர் சேர்த்த சுண்ணாம்பை உபயோகித்தால் பலன் கிடைக்காது. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கடல் சிப்பியிலிருந்து கிடைக்கும் இயற்கைச் சுண்ணாம்பையே உபயோகிக்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.