IRCTC புதிய வசதி! ரயில் பயணத்தின் போது நீங்கள் விரும்பும் உணவுகளை ஆர்டர் செய்யலாம்

Food Menu of Railways: இந்திய ரயில்வே தொடர்ந்து பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தி வருகிறது. இப்போது உணவு விநியோக மெனு தொடர்பாக மக்களுக்கு புதிய வசதியை ரயில்வே வழங்கியுள்ளது. அதாவது நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு, குழந்தைகளுக்கான உணவு மற்றும் உணவுப் பிரியர்களுக்கு என அவரவர் தேவைக்கேற்ப உள்ளூரில் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ரயில்வே அமைச்சகம், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) ரயில்களுக்கான உணவு மெனுவை பயணிகளுக்கு ஏற்ப வழங்க அனுமதி அளித்துள்ளது. 

இந்த புதிய உணவு மெனுவின் கீழ், பயணிகளுக்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப உள்ளூர் மற்றும் ஆங்காங்கே பிரபலமான உணவு வழங்கப்படும். இந்த உணவுக்கான கட்டணம் உங்கள் டிக்கெட்டில் சேர்க்கப்படாது. ஒருவேளை ஏற்கனவே டிக்கெட் கட்டணத்தில் உணவு உணவுக்கான சேர்க்கப்பட்டிருந்தால், உங்களுக்கான உணவு மெனுவை IRCTC தான் முடிவு செய்யும். பயணிகளால் அல்ல என்பது இங்கே கவனிக்கத்தக்கது. 

IRCTC மெனுவில் என்னென்ன உணவு வகைகள் இருக்கும்: 
இந்தப் புதிய மெனுக்களில் தங்கள் சொந்த மாநில உணவு வகைகள் மற்றும் நீங்கள் விரும்பும் உணவு வகைகள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய உணவுகள், பருவகால உணவுகள், பண்டிகைகளின் போது சாப்பிட விரும்பும் உணவு வகைகள், அத்துடன் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்ப உணவு, குழந்தைகளுக்கான உணவு மற்றும் ஆரோக்கிய உணவு விருப்பங்கள் போன்ற உணவுகளும் அடங்கும். ப்ரீபெய்டு ரயில்களின் வழங்கப்படும் உணவு கட்டணம் என்பது ஐஆர்சிடிசி அறிவிக்கப்பட்ட விலையில் தான் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர்கள் செய்யலாம்:
ஐஆர்சிடிசி ஏற்கனவே முடிவு செய்துள்ள பட்ஜெட்டிலேயே ப்ரீபெய்டு ரயில்களில் மெனு வழங்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ரயில்களில் ஏ-லா-கார்டே உணவு மற்றும் பிராண்டட் உணவுப் பொருட்களும் எம்ஆர்பியில் அனுமதிக்கப்படும். A-la-carte உணவின் மெனு மற்றும் கட்டணத்தை IRCTC முடிவு செய்யும்.

உணவு மெனு மற்றும் கட்டணத்தை IRCTC முடிவு செய்யும்:
பட்ஜெட் பிரிவு ரயில்களின் மெனு, IRCTC ஆல் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்குள் வழங்கப்படும். மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏ-லா-கார்டே உணவுகள் மற்றும் பிராண்டட் உணவுகளை எம்ஆர்பி விலையில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். மெனு மற்றும் கட்டணத்தை IRCTC முடிவு செய்யும். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.