சென்னையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கான மார்பக புற்று நோய் சோதனை கொள்ளவதற்கு ஏதுவாக வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான அரசின் அறிவிப்பில், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளினர்களின் உடல்நலம் பேணி பயனடையும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சீரிய முயற்சி எடுத்து செயல்படுத்தி வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
தற்போது பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது என்பது அவசியமாக உள்ளது. அதன் அடிப்படையில் இந்த பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனையில் அதிகளவில் பரிசோதனை கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் சிரமமாக உள்ளதை கருத்தில் கொண்டு, ஏதுவாக நமது காவல் ஆணையாளர் அவர்கள் ஏற்பாட்டில் எழும்பூர் காவல் மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை (Mammogram Screening Test) செய்து கொள்ள வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் பெண் காவல் ஆளினர்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து மார்பக பரிசோதனை செய்து கொண்டு தங்களை இந்த மார்பக புற்றுநோய் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், காவல் மருத்துவமனையில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (Ultra Sound Scan), சி.டி ஸ்கேன் (CT Scan), இரத்தம் பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனை (Blood & Urine Test) ஆகியவை பரிசோதனை செய்து கொள்ளவதற்கு ஏதுவாக வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை காவல் ஆளினர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தி கொண்டு தங்கள் உடல் நலன்களை பேணிகாத்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.