ஆந்திர மாநிலத்தில் மாலை போட்டு விரதம் இருப்பவர் போல் வந்து தெலுங்கு தேசம் கட்சி உள்ளூர் தலைவரை வெட்டி கொலை செய்ய முயன்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனி நகர தெலுங்குதேச கட்சி பொறுப்பாளராக இருப்பவர் சேஷகிரிராவ். சம்பவத்தன்று காலை மாலைபோட்டு சாமியார் போல யாசகம் கேட்டு வந்த நபருக்கு சேஷகிரிராவ் அரிசி போடும்போது, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெட்டி விட்டு ஓடிவிட்டார்.
இதனால் காயம் அடைந்த சேஷகிரிராவ் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.