மியான்மர் தேசிய தினத்தை முன்னிட்டு, 6,000 சிறை கைதிகளை அந்நாட்டு ராணுவம் விடுதலை செய்தது.
கடந்தாண்டு பிப்ரவரி மாதம், மியான்மரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், ஆங் சான் சூகி உள்பட அரசியல் தலைவர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கானோரை சிறையில் அடைத்தது.
ஆங் சான் சூகியின் ஆலோசகரும், ஆஸ்திரேலிய நாட்டு பொருளாதார வல்லுனருமான ஷான் டர்னல், இங்கிலாந்து நாட்டு முன்னாள் தூதுவர் விக்கி போமேன் உள்பட 4 வெளிநாட்டு கைதிகள், பெண் கைதிகள் 600 பேர் உள்பட மொத்தம் 5,774 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.