யவத்மால், மஹாராஷ்டிராவில் ஒரு கிராமத்தில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மஹராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள பன்சி கிராமத்தில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பன்சி கிராம பஞ்சாயத்து தலைவர் கஜனன் தலே கூறியதாவது:
கொரோனா பரவல் காலத்தில், ‘ஆன்லைன்’ வகுப்புகளுக்காக பள்ளி மாணவ – மாணவியர் மொபைல் போன் பயன்படுத்த துவங்கினர். ஆனால், இப்போது அதில் பல விளையாட்டுகளை ஆடத் துவங்கி அதிலேயே மூழ்கி விட்டனர்.
இதனால், கிராம பஞ்சாயத்து கூட்டத்தில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
மாநிலத்திலேயே சிறார்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதித்து இருப்பது எங்கள் கிராமத்தில் தான்.இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், சாங்லி மாவட்டத்தில் உள்ள மொஹித்யாஞ்சே வட்கான் கிராமத்தில், தினமும் இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை, அனைவருமே மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement