சிலிகுரி: மேற்கு வங்கத்தில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று வடக்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியில் ரூ.1206 கோடி மதிப்பிலான மூன்று தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மேடைக்கு பின் பகுதியில் மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்தனர். இதையடுத்து கட்கரி காரில் புறப்பட்டுச் சென்றார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டார்ஜிலிங் எம்.பி. ராஜு பிஸ்டாவின் வீட்டுக்கு கட்கரி அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து விவரங்களை எதிர்பார்க்கிறோம்” என்றனர்.