தீவிரவாதத்திற்கு நிதியுதவி கூடாது: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: தீவிரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் வகையில் சர்வதேச நாடுகளின் அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. மாநாட்டின் தொடக்க நாளான இன்றைய நிகழ்வில், பிரதமர் மோடி பேசுகையில், ‘தீவிரவாத தாக்குதல் எங்கு நடந்தாலும் அதன் மீது நடவடிக்கை அவசியமானது. இந்த உலகம் தீவிரவாதத்தின் கோர முகத்தை உணரும் முன்னரே இந்தியா அதன் தாக்கத்தை சந்தித்துவிட்டது.

பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பெயர்களில், வகைகளில் இந்தியா தீவிரவாதத்தால் பாதித்துள்ளது.
ஆயிரக்கணக்கான உயிர்களை நாம் தீவிரவாதத்துக்கு இழந்துள்ளோம். இருந்தாலும் துணிச்சலுடன் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடியுள்ளோம். தீவிரவாதம் வேரறுக்கப்படும் வரை நாம் ஓயக்கூடாது. தீவிரவாதத்தின் நீண்ட கால தாக்கம் என்பது ஏழை மக்கள் மீதே பெருமளவில் பிரதிபலிக்கிறது. உள்ளூர் பொருளாதாரத்தை பாதிக்கும், தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்யும் வேரைக் கண்டறிந்து ஒழிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.