ஷில்லாங், :மேகாலயாவில், 14 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘ஹெராயின்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மூவரை போலீசார் கைது செய்துஉள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள ரி-போய் மாவட்டத்திலிருந்து ஷில்லாங் செல்லும் பஸ்சில், போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாண்டரின்-சைடன் கிராமத்தில் உள்ள நெடுஞ்சாலையில், ஷில்லாங் செல்லும் பஸ்களை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது 158 சோப்பு டப்பாக்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 2 கிலோ எடையுள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு 14 கோடி ரூபாய்.
கடத்தலில் ஈடுபட்டதாக பிஷ்னுபூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் கடத்தலை தடுத்த போலீசாருக்கு, மாநில முதல்வர் கன்ராட் சங்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement