புதுடில்லி,:’மாருதி சுசூகி’ நிறுவனம், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான புதுப்பிப்பு திட்டங்களை விரிவுபடுத்த, ‘ஐ.ஐ.டி., பாம்பே’வின் ‘சைன்’ அமைப்புடன், மூன்று ஆண்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, மிகவும் கடினமான வணிக பிரச்னைகளை தீர்ப்பதற்கான தகுதி பெற்ற நிறுவனங்கள் அடையாளம் காணப்படும். பின், அந்நிறுவனங்களுக்கு, வணிக பிரச்னைகளுக்கான தீர்வுகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ‘ஸ்டார்ட்அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா’ போன்ற முன்னெடுப்புகளின் வாயிலாக, ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் இணைந்து, பல்வேறு ஆட்டோமொபைல் புதுப்பிப்பு திட்டங்களை, மாருதி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement