Breaking! பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன மத்திய அரசு பணியாளர் டெல்லியில் கைது

நியூடெல்லி: பாகிஸ்தானுக்கு ரகசியமான மற்றும் முக்கியமான தகவல்களை அனுப்பிய வெளியுறவு அமைச்சகத்தில் (MEA) பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். வாகன ஓட்டுநராக அமைச்சகத்தில் பணி புரிந்து வந்த டிரைவரை, பாதுகாப்பு ஏஜென்சிகளின் உதவியுடன் டெல்லி போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயின், ஹனி-டிராப் வலையில் இந்த வாகன ஓட்டுநர் சிக்கியிருந்தார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்பு கைது குறித்து ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

ஹனி டிராப் என்பது, பல காலமாக புழக்கத்தில் இருந்து, வேவு பார்க்கும் பொறி முறைகளில் ஒன்று. ஒருவருக்கு உள்ள பலவீனத்தை குறி வைத்து, அதை பயன்படுத்தி, தங்கள் வலையில் விழ வைத்து தகவல்களை வாங்கும் உக்தி இது. சிலருக்கு பணத்தின் மீது ஆசை இருக்கும், சிலர் மதுவிற்கு அடிமையாக இருப்பார்கள், சிலருக்கு பெண்கள் மீது ஆசை இருக்கும். யாருக்கு எந்த வீக்னஸ் இருக்கிறதோ, அதை குறிவைத்து, அவர்களை வலையில் சிக்க வைப்பதுதான் ஹனி ட்ராப் முறை.

பெண்கள் மீது மோகம் கொண்டவர்களை தங்கள் வலையில் விழ வைக்க, கவர்ச்சியான ஒரு பெண்ணை அவர்களிடத்தில் பழக வைத்து, அது தொடர்பான வீடியோ எடுத்து வைத்துக் கொள்வார்கள். அவர்களிடத்தில் இருந்து வேண்டும் தகவல்களை வாங்க, அந்த வீடியோவை பயன்படுத்துவார்கள். தங்கள் ரகசியத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதற்காக ஹனி டிராப் வலையில் சிக்கிக் கொண்டவர்கள், தகவல்களை கசிய விட்டுவிடுவார்கள். 

தற்போது, வெளியுறவு அமைச்சக பணியாளர் ஒருவர், இந்த வலையில் சிக்கியிருப்பதும், பாகிஸ்தானுக்கு தகவல்களை கொடுத்திருக்கிறார் என்பதும் பல கேள்விகளை எழுப்புகிறது. புதுடெல்லியில் தீவிரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதை தடுப்பது தொடர்பான மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் இந்த கைது நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.