இட்டாநகர்: அருணாச்சலப்பிரதேச தலைநகர் இட்டாநகரில் புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார். இட்டாநகரில் டோனி போலோ விமான நிலையத்தை திறந்து வைத்துள்ளார். 690 ஏக்கர் பரப்பளவில் ரூ.640 கோடி மதிப்பில் இட்டா நகர் விமான நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் முதல் முழு பசுமை விமானநிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
