உலகிற்கு முதன்முறையாக தனது மகளை அறிமுகம் செய்த கிம் ஜோங் உன்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை


வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தனது 9 வயது மகளை முதன்முறையாக உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளதுடன், அரசு செய்தி ஊடகத்தில் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

மகளின் புகைப்படம்

இதுவரை தமது பிள்ளைகள் தொடர்பில் எந்த தகவலையும் வெளியிட்டிராத கிம் ஜோங், தற்போது முதன்முறையாக தமது மகளின் புகைப்படத்தை அரசு செய்தி ஊடகத்தில் வெளியிட அனுமதித்துள்ளார்.

உலகிற்கு முதன்முறையாக தனது மகளை அறிமுகம் செய்த கிம் ஜோங் உன்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை | North Korean Despot Unveils His Daughter

@reuters

குறித்த சிறுமி கிம் ஜோங் உடன் ஏவுகணை ஏவும் வளாகத்தில் காணப்பட்டுள்ளார்.. மட்டுமின்றி, பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை முடியும் வரையில் தமது பெற்றோருடன் அந்த வளாகத்தில் சிறுமியும் காணப்பட்டுள்ளார்.

மேலும், இராணுவ உயர் அதிகாரிகளுடன் கிம் ஜோங் உன் கருத்து பரிமாற்றம் மேற்கொள்ளும் போதும், குறித்த சிறுமி உடன் இருந்துள்ளார்.
கிம் ஜோங் தொடர்பில் நன்கு தெரிந்தவர்கள், குறித்த சிறுமியின் பெயர் Kim Ju-ae என இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

உலகிற்கு முதன்முறையாக தனது மகளை அறிமுகம் செய்த கிம் ஜோங் உன்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை | North Korean Despot Unveils His Daughter

@reuters

கிம் ஜோங் சூளுரை

ஆனால் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது தான் அமெரிக்காவை எதிர்கொள்ளும் துணிவு தங்களுக்கு இருப்பதாக கிம் ஜோங் சூளுரைத்திருந்தார்.

உலகிற்கு முதன்முறையாக தனது மகளை அறிமுகம் செய்த கிம் ஜோங் உன்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை | North Korean Despot Unveils His Daughter

@reuters

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டது.
எதிரிகள் தங்களை தொடர்ந்து அச்சுறுத்துவார்கள் என்றால், கட்சியும் அரசும் உரிய பதிலடி அளிக்கும் எனவும், அணு ஆயுத ஏவுகணைகளால் பதில் அளிப்போம் எனவும் கிம் ஜோங் கூறியிருந்தார்.

தங்களது Hwasongpho-17 ஏவுகணையானது வெற்றியடைந்துள்ளதாகவும் வடகொரியா அறிவித்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.