புதுச்சேரி இ.சி.ஆர்., மெயின் ரோடு லாஸ்பேட்டையில் அமைந்துள்ள எம்.வி.ஆர்., மருத்துவ மையத்தில் நாளை 20ம் தேதி இருதய பரிசோதனை முகாம் நடக்கின்றது.
சென்னை மெட்வே மருத்துவமனையின் தலைமை இருதய சிறப்பு சிகிச்சை நிபுணர் ஜெயசங்கர் தலைமையிலான மருத்துவ குழுவினர் முகாமில் பரிசோதனை நடத்துகின்றனர். முகாம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். முகாமில் ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு பரிசோதனைகள், இ.சி.ஜி, இருதய ஸ்கேன் மற்றும் சிறப்பு மருத்துவரின் ஆலோசனை உள்ளிட்டவை சிறப்பு சலுகையாக ரூ.1,000 செய்யப்படுகிறது.
மேலும், நீரிழிவு நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடல் பருமன், ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்புடையவர்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் மயக்கம், தலைசுற்றல், நெஞ்சு வலி மற்றும் எரிச்சல் போன்ற அறிகுறி உடையவர்கள் மற்றும் பொதுவான உடல் நல பரிசோதனைகள் செய்ய விரும்புபவர்களும் முகாமில் பங்கேற்கலாம்.
பரிசோதனைக்கு காலை வெறும் வயிற்றில் வர வேண்டும். முன்பதிவிற்கு – 9047791662, 0413-2252662 மற்றும் 2257663 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement