கிரைப் வாட்டரால் குழந்தைகள் உயிருக்கு ஆபத்தா? – மருத்துவ விளக்கம்

“உங்கக் குழந்தைக்கு தினமும் மூன்றுவேளை கிரைப் வாட்டர் கொடுங்க” என்ற விளம்பரத்தைப் பார்க்காதவர்கள்கூட தங்களது குழந்தைப் பருவத்தில் கிரைப் வாட்டர் குடித்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த நிலையில், `குழந்தைகளுக்கு கிரைப் வாட்டரை கொடுப்பது விஷம் கொடுப்பதற்குச் சமம்’ என்ற எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள்நல மருத்துவர் அருண் பாபு திருநாவுக்கரசின் ட்விட் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

கிரைப் வாட்டர் குறித்து சென்னையைச் சேர்ந்த குழந்தைகள்நல சிறப்பு மருத்துவர் மற்றும் குழந்தைகள் குடல்நல மருத்துவர் தனசேகர் கூறியதாவது:

குழந்தைகள் சிறப்பு மருத்துவர் மற்றும் குழந்தைகள் குடல்நல மருத்துவர் டாக்டர் தனசேகர்

“பொதுவாகவே கிரைப் வாட்டரில் எந்தவொரு மருத்துவ குணமும் கிடையாது என்பதே உண்மை. கிரைப் வாட்டரை கண்டுபிடித்தவர் வுட்வர்ட் என்பவர். 17-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பெருமளவில் கொசுக்களால் மலேரியா நோய் பரவியது. இதற்காக Quinine என்ற மருந்தை வுட்வர்ட் கண்டுபிடித்தார். இந்த quinine-ன் மூலப்பொருள்களில் ஒன்றுதான் கிரைப் வாட்டர்.

மருத்துவத்துறையில் கிரைப்பிங் (Gripping) என்றால் வயிற்றுவலி என்று பொருள். இதுதான் இப்போது அது மருவி colic என்று அழைக்கப்படுகிறது. கிரைப் வாட்டரில் ஆல்கஹால் அளவு சற்று அதிகமாக இருக்கும். அறிவியலின்படி குழந்தைகள் கிரைப் வாட்டருக்கு அடிமையாகவும் அல்லது பின்னர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகவும் ஆகலாம்.

கிரைப் வாட்டரில் வயிற்றில் உள்ள உப்புசத்தை வெளியேற்ற சோடா மாவை (Sodium bicarbonate) பயன்படுத்தத் தொடங்கினர். இப்படி ஆல்கஹால் மற்றும் சோடா மாவைக் கலந்து குடிக்கும்போது பொதுவாகவே ஏப்பம் வரும். அதன்பின்னர் ஆல்கஹாலினால் குழந்தைகள் தூங்கிவிடுவர்.

newborn baby with mother

ஒரு காலத்தில் கிரைப் வாட்டரில் ஆல்கஹால் இருந்ததால், மக்கள் அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். அதனால்தான் தற்போது இந்தியாவில் வரும் கிரைப் வாட்டரில் ஆல்கஹால் இருப்பதில்லை. மேலும் `Alcohol-free’ என்று அச்சிடப்பட்டிருக்கிறது.

குழந்தைகள் வயிறு மிகவும் மென்மையாக இருக்கும். கிரைப் வாட்டர் போன்ற ஒரு பொருள் வயிறுக்குள் செல்லும்போது ஏப்பம் மட்டுமே உருவாக்கும். தவிர அந்த கிரைப் வாட்டரில் உள்ள சர்க்கரை, குழந்தைகளுக்குத் தொற்றை உண்டாக்கும். கிரைப் வாட்டரில் எந்தவொரு தடை செய்யப்பட்ட பொருளும் இல்லாததால் இதற்கு பெருமளவில் தடை எழவில்லை. ஆனால், குழந்தைகளுக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது தீங்கு விளைவிக்கும் என்பது மிக மிக உண்மை” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.