குரூப் 1: அனுமதி மறுக்கப்பட்டதால் விரக்தியில் ஹால் டிக்கெட்டுகளை கிழித்த தேர்வாளர்கள்!

குரூப் 1 பிரிவில் உள்ள பல நிலைகளுக்கு தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மன விரக்தியில் கையில் வைத்திருந்த ஹால் டிக்கெட்களை கிழித்தெறிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
image
தமிழகத்தில் குரூப் 1 பிரிவில் 18துணை ஆட்சியா், 26துணைக் காவல் கண்காணிப்பாளா், 13வணிகவரி உதவி ஆணையா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் என மொத்தம் 92 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கென 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வை எழுதினர்.
image
காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. 9 மணிக்கெல்லாம் தேர்வு மையத்தில் தேர்வர்கள் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. குரூப்-1 தேர்வினை எழுத பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள மையங்களில் தேர்வு எழுதுகிறார்கள்.
image
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏனாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வுக்கு தாமதமாக‌ வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அந்த தேர்வு மையத்தின் வாயிலில் உள்ள அலுவலர்களிடம் மன்றாடி பார்த்தனர்.
image
அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மன விரக்தியில் கையில் வைத்திருந்த ஹால் டிக்கெட்களை சிலர் கிழித்தெறிந்தனர். மேலும் ஒரு சில தேர்வர்களும் அவர்களது பெற்றோர்களும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.