திருமலை நாயக்கர் மகாலை சுற்றி பார்க்க 25ந்தேதி வரை இலவச அனுமதி

மதுரை: மதுரையில் புகழ்பெற்ற திருமலை நாயக்கர் மகாலை சுற்றி பார்க்க 25ந்தேதி வரை இலவச அனுமதி வழங்கப்படுவதாக தொல்லியல் துறை அறிவித்து உள்ளது. உலக மரபு வாரத்தை ஒட்டி ஒரு வாரத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மதுரையில்  திருமலை நாயக்கர் அரண்மனையானது அரசர் திருமலை நாயக்கரால் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மதுரை நாயக்கர்கள் 1545 முதல் 1740 வரை இந்த ராஜ்யத்தை ஆட்சி செய்தனர். திருமலை நயாக்கர் (1623-1659) மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் பல்வேறு கட்டடிடங்களை எழுப்பி இருந்தார். அப்போது மதுரை நகரம் இந்திய மற்றும் ஐரோப்பிய வர்த்தகர்களுக்கு ஒரு வர்த்தக நகரமாகத் திகழ்ந்தது. அரண்மனையை கட்டுவதற்கு திருமலை நாயக்கர் ஒரு இத்தாலிய கட்டிடக் கலைஞரை பணியில் அமர்த்தியதாக நம்பப்படுகிறது. இந்த கட்டிடமான சுன்னம் எனப்படும் சுண்ணாம்பு மற்றும் மென்மை மற்றும் பளபளப்பான தோற்றத்தை பெறுவதற்காக முட்டையின் வெள்ளை கலந்த கலவையால் கட்டப்பட்டது.

இந்த அரண்மனை இரண்டு பெரிய பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, அவை ஸ்வர்க விலாசம் மற்றும் ரங்க விலாசம் ஆகும். அரச குடியிருப்பு, தியேட்டர், சன்னதி, அடுக்கு மாடி குடியிருப்பு, கவசம், குளம் மற்றும் தோட்டம் இந்த இரண்டு பகுதிகளிலும் அமைந்து இருந்தன. நடன மண்டபம் அரண்மனையின் முக்கிய இடமாகும். இங்கு தினமும் நடன நிகழ்ச்சிகளை திருமலை நாயர்க்கர் கண்டு கழித்துள்ளார். பின்னர்  18 ஆம் நூற்றாண்டில் இந்த அரண்மனையின் பகுதியாக இருந்த பல கட்டமைப்புகள் இடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இன்று காணக்கூடிய கட்டிடமானது, திருமலை நாயக்கர் ராஜா வாழ்ந்த பிரதான அரண்மனையாக இருந்தது. நிஜ அரண்மனை வளாகம் தற்போதைய கட்டமைப்பை விட நான்கு மடங்கு பெரியது. திருமலை நாயக்கர் அரண்மனை தென்னிந்திய அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயிலின் தெற்கே 2 கிமீ தொலைவில் இந்த அரண்மனை அமைந்துள்ளது  இதை அப்போது,  சென்னை மாகாண ஆளுநராகஇருந்த லார்ட் நேப்பியர், 1866-72 ஆம் ஆண்டில் ஓரளவிற்கு அரண்மனையில் பராமரத்துப் பணி செய்தார். தொடர்ந்து மத்தியஅரசின் தொல்லியல்துறை பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு, பழமை மாறாமல் போற்றி வருகிறது.

இந்த அரண்மனை நகரின் கிழக்குப் பகுதியில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மதுரை திருமலை நாயக்கர் மகாலில், தற்போது, நுழைவு நுழைவாயில், மெயின் ஹால் மற்றும் டான்ஸ் ஹால் ஆகியவை பாதுகாப்பான நிலையில் உள்ளன. இதை சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள பெரிய தூண்கள் உலக புகழ் பெற்றது. தூண் உயரம் 82 அடி மற்றும் அகலம் 19 அடி.

சுதந்திரத்திற்குப் பிறகு திருமலை அரண்மனை ஒரு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டு இப்போது தமிழ்நாடு தொல்பொருள் துறையின் பாதுகாப்பின் கீழ் உள்ளது. இந்த அரண்மனை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். நுழைவு டிக்கெட் விலை ரூ .10 ஆகும்

திருமலை நாயக்கரின் பெருமைகளை விளக்கும் வகையில் தினமும் ஒலியும், ஒளியும் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் மாலை 6.45 மணி முதல் 7.35 மணி வரை ஆங்கிலத்திலும், இரவு 8 மணி முதல் 8.50 மணி வரை தமிழிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் உலக மரபு வாரத்தை ஒட்டி, மதுரை திருமலை நாயக்கர் மஹாலை, இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. திருமலை நாயக்கர் மஹாலை ஒரு வாரம் நுழைவு கட்டணமின்றி சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 19 முதல் 25 வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றி பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.