நடப்பாண்டு புதிய டிசைனில் பொங்கல் இலவச வேட்டி, சேலை: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மற்றும் ஆய்வு …

சென்னை: பொங்கல் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து,  குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டிகள் மற்றும் சேலைகளை மாண்புமிகு முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக வேட்டி சேலை வழங்கப்படவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டும் மீண்டும், குடும்ப அட்டைதாரர் களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்க தமிழகஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக, த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கதர்துறை அமைச்சர் காந்தி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். இந்த திட்டத்தால் பயன் பெற போகிறார்கள்.? அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த வருடம்   புதிய டிசைனில் இலவச வேட்டி சேலை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பெண்களுக்கான இலவச வேட்டி சேலையை 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதிக்குள் வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏராளமான டிசைன் சேலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து,  15 டிசைன் மற்றும் பல நிறங்களில் வழங்கப்பட்ட உள்ளதாகவும், ஐந்து டிசைனில் வேட்டி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.