சென்னை: சென்னை, பேரவள்ளூர் பகுதியில் நேற்று இரவு குடிபோதையில் 2 பேரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது செய்துள்ளனர். குடிபோதையில் மதுபான கூடம் அருகே பொதுமக்கள் இருவரை அரிவாளால் வெட்டி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். கிஷோர், அருண் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
