நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த பிரபல நடிகர்! கோலாகலமாக நடந்த திருமணத்தின் வீடியோ வைரல்


தெலுங்கு நடிகர் நாக சவுரியாவின் திருமண வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீண்ட நாள் காதல்

தெலுங்கில் 2011ஆம் ஆண்டு வெளியான Cricket Girls And Beer என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நாக சவுரியா.

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகரான இவர் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் சாய் பல்லவியுடன் இணைந்து தியா என்ற படத்தில் நாக சவுரியா நடித்துள்ளார்.

இந்த நிலையில் நாக சவுரியாவுக்கும், அவரது நீண்ட நாள் காதலி அனுஷா ஷெட்டிக்கும் இன்று பெங்களூரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்று இருக்கிறது.

நவம்பர் 19ஆம் திகதி மெஹந்தி விழா நடந்ததைத் தொடர்ந்து, மறுநாள் இவர்களின் திருமணம் நடந்தது.

இந்த திருமண நிகழ்வில் இருவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமண வரவேற்பு 

நாக சவுரியா – அனுஷாவின் திருமண வரவேற்பு பிரம்மாண்டமாக ஐதராபாத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களின் திருமணம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.   

நாக சவுரியா-அனுஷா/Naga Shaurya-Anusha



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.