ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(30), நேற்று காலை குரூப் 1 தேர்வுக் காக ராமநாதபுரத்துக்கு அரசு பேருந்தில் வந்தார். நெரிசலால் படிக்கட்டில் பயணித்தார்.
சத்திரக்குடி சுங்கச்சாவடி கம்பத்தில் கோபாலகிருஷ்ணன் மோதி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
கோபாலகிருஷ்ணனுடன் அவரது சகோதரி ஒருவரும் குரூப் 1 தேர்வு எழுத பஸ்ஸில் வந்துள்ளார். ஒரு நிறுத்தத்தில் பஸ்ஸில் ஏறிய கர்ப்பிணிக்கு இடம் கொடுப்பதற்காக கோபால கிருஷ்ணன் இருக்கையில் இருந்து எழுந்து படிக்கட்டில் பயணித்துள்ளார். அப்போது விபத்து நேரிட்டதாக பேருந்தில் வந்த பயணிகள் கூறினர்.