
கர்நாடகாவில் ஹிக்ஹொட்ரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேறு கிராமத்தை சேர்ந்த பெண் வந்துள்ளார். அந்த பெண் ஹிக்ஹொட்ரா கிராமத்தில் உள்ள லிங்காயத் பீடி என்ற தெருவில் உள்ள தண்ணீர் தொட்டியில் குடிநீர் குடித்துள்ளார். அந்த பெண் மாற்று சமூகத்தை (தலீத்) சேர்ந்தவர் ஆவார்.
இந்நிலையில், மாற்று சமூகத்தை சேர்ந்த பெண் தங்கள் தெருவில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்ததால் லிங்காயத் பீடி தெருவை சேர்ந்தவர்கள் குடிநீர் தொட்டியை மாட்டு சிறுநீர் கொண்டு சுத்தம் செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பவம் உறுதி செய்யப்படும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மந்திரி தெரிவித்துள்ளனர்.