சமூக ஊடக பிரபலமான ரவுடி பாட்டீ என்று அழைக்கப்படும் ரோஹித் பாட்டீ என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
புலந்த்ஷாஹரைச் சேர்ந்த ரோஹித், கிரேட்டர் நொய்டாவின் சி செக்டரில் வசித்து வந்தார். இவர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் பிரபலமாக இருந்து வந்தார். அவரது வீடியோக்களுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
நேற்று இரவு ரோஹித் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் ஒரு விருந்தில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
திரும்பும் வழியில் சுகாத்பூர் சுரங்கப்பாதை அருகே அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வேகமாக வந்த அவர்களது கார் திருப்பத்தை கவனிக்காமல் மரத்தில் மோதியது.
வண்டி ஓட்டி வந்த ரோஹித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பர்கள் மனோஜ், அதிஷ் ஆகியோர் காயங்களுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் ஒருவர் தீவிர காயங்கள் காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ரோஹித்தின் மரணச் செய்தி பரவிய சிறிது நேரத்திலேயே, அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்த விரைந்தனர்.
newstm.in