10 ஆண்டுகள் ஓடிப் போச்சு… வீரபாண்டியார் இல்லாத சேலம் திமுக எப்படி இருக்கிறது?

18 வயதில் திமுகவில் சேர்ந்து கிளைக் கழக செயலாளர், வட்டக் கழக பிரதிநிதி, மாவட்ட கழக பிரதிநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர் என படிப்படியாக வளர்ந்தார். 1974ல் சேலம் மாவட்ட

செயலாளராக முதல்முறை பொறுப்பேற்றார். அதிலிருந்து 38 ஆண்டுகள் சேலத்தை தனது கட்டுப்பாட்டில் திமுகவின் மாபெரும் கோட்டையாக கட்டி காத்தவர். அவர் தான் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம்.

6 முறை சட்டமன்ற உறுப்பினராக, ஒருமுறை சட்ட மேலவை உறுப்பினராக, மூன்று முறை விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். திமுகவின் தூண் வீரபாண்டி ஆறுமுகம் என்று கலைஞர்

புகழாரம் சூட்டியுள்ளார். கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு மாதக்கணக்கில் சிறைவாசம் அனுபவித்துள்ளார். ஒருமுறை மிசா சட்டத்தின் கீழ் கைதாகி சிறைக் கொடுமைகளுக்கு ஆளானார்.

சேலம் ரயில்வே கோட்டம் உருவானதில் வீரபாண்டி ஆறுமுகம் நடத்திய போரட்டம் முக்கிய பங்காற்றியது. அதேசமயம் இவர் மீதான சர்ச்சைகளும், மோசடி வழக்குகளும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதை மறுக்க முடியாது. தனது 75 வயதில் 2012ஆம் ஆண்டு இதே நாளில் (நவம்பர் 23) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். வீரபாண்டியாரின் மறைவை அடுத்து அவரது மகன் ராஜா கட்சி பணிகளை மேற்கொண்டு வந்தார்.

சேலம் மாவட்ட திமுக செயலாளராகவும் பதவியில் இருந்தார். ஆனால் அவரது எதிர்பாராத மறைவு சேலம் திமுகவை உலுக்கி போட்டது. தற்போது இவரது குடும்பத்தில் இருந்து யாரும் ஆக்டிவ் அரசியலில் இல்லை. ஆண்டுதோறும் பிறந்த நாள், நினைவு நாள் ஆகிய இரு தினங்களில் சம்பிரதாய நிகழ்வாக மட்டுமே வீரபாண்டியாரை கட்சியினர் நினைவு கூர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.

வீரபாண்டியாருக்கு பின்னர் சேலம் மாவட்ட திமுக பிரிக்கப்பட்டு விட்டது.

தான் பொறுப்பு அமைச்சராக பதவி வகித்து வருகிறார். தற்போது சேலம் மாநகர் மாவட்டம், சேலம் மத்திய மாவட்டம், சேலம் மேற்கு மாவட்டம், சேலம் கிழக்கு மாவட்டம் என நான்காக பிரிந்து சேலம் திமுக செயல்பட்டு வருகிறது. இதற்கு முறையே பா.ரகுபதி, ரா.ராஜேந்திரன், டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் கழக செயலாளர்களாக இருக்கின்றனர்.

இவர்கள் மத்தியில் போதிய ஒற்றுமையின்மை நிலவி வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கடைசியாக நடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தாலும் சேலத்தில் பின்னடைவை சந்தித்தது. மொத்தமுள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே திமுக வென்றது. எஞ்சிய 10 தொகுதிகளையும் அதிமுகவே கைப்பற்றியது. இருப்பினும் 2022ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான இடங்களில் திமுக வென்றது.

இது அடுத்து வரும் தேர்தல்களுக்கு நம்பிக்கையூட்டும் விஷயமாக அமைந்துள்ளது. அடுத்து 2024 மக்களவை தேர்தல் தான் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனவே மாவட்ட செயலாளர்களின் ஒன்றுபட்ட செயல்பாடு, உள்குத்து அரசியலை ஓரங்கட்டுதல், தீவிர மக்கள் பணி ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் மீண்டும் திமுகவின் கோட்டையாக ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் மாறும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.