அண்ணாமலைக்கு முடிவு… ரீ என்ட்ரிக்கு காயத்ரி.. காத்திருக்கும் ரகுராம்கள்..?

கட்சியில் இருந்து ஆறு மாதத்துக்கு நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்தும், சாடியும் ட்வீட் போட்டு வருகிறார். அது அவரது எதிர்கால அரசியலை கேள்வி குறியாக்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது. கட்சியில் உள்ளவர்களை குறித்து விமர்சித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் நிலையில் காயத்ரி ரகுராம் தொடர்ந்து மனக்குமுறல்களை கொட்டி வருகிறார்.

அது, அவருக்கு போதிய அரசியல் அனுபவம் இல்லாததன் வெளிப்பாடாக இருக்கலாம் என்றும்

விஷயத்தை வைத்து அண்ணாமலையை டார்கெட் செய்ய இறங்கிட்டாரா என்றும் கருத்துக்கள் வைக்கப்படுகிறது. எப்படி இருப்பினும், அண்ணாமலையை காயத்ரி ரகுராம் தொடர்ந்து சாடி வருவதால் கட்சியின் தலைவர் பொறுப்பில் அண்ணாமலை இருக்கும் வரை காயத்ரி ரகுராம் மீண்டும் கட்சியில் பணியாற்ற வாய்ப்பு குறைவுதான். ஒருவேளை பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாறினால் காயத்ரி ரகுராமுக்கு கிரீன் சிக்னல் விழலாம் என்று தெரிகிறது.

மேலும், தான் சார்ந்த சமூகத்தில் இருந்து தலைமை பதவி கிடைப்பது காயத்ரி ரகுராமுக்கு சாதகமான சூழலை ஏற்படும் என்பதை அவர் உட்பட பலர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், காயத்ரி ரகுராம் மீண்டும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், காயத்ரி ரகுராம், என்னை வெளியேற்ற விரும்பியவர்களுக்கு அவர்கள் விரும்பியதை அடைய போதுமான இடத்தை அளித்துள்ளேன். ஆம், நான் நீண்ட காலமாக சுய அழிவு நிலையில் இருந்தேன். காரியகர்த்தாக்கள் மற்றும் தலைவர்கள் முன்னிலையில் சீதாவின் அக்னி பரீட்சை போன்று பாஜக மீதான விசுவாசத்தை நிரூபிப்பதில் எனக்கு கவலையில்லை.

பாஜகவில் சுதந்திரமாக பணியாற்ற விரும்புகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் குறிவைக்கப்பட்டேன். அதனால் பல இரவுகள் நான் சரியாக உறங்கியதில்லை. திமுக, விசிகவை தொடர்ந்து இப்போது வலதுசாரி ஆதரவாளர்களாலும் நான் தாக்கப்பட்டுள்ளேன்

ட்விட்டரில் இருப்பவர்களை விட, போட்டியில் இருப்பவர்களுக்கு உண்மை தெரியும். பதவியில் இருப்பவர்களுக்கு உண்மை தெரியும். இந்த முறைகேடுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் எனது பணியை செய்து மக்களைச் சென்றடைவேன். அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை பணியாற்ற அனுமதியுங்கள்.

நமது தலைசிறந்த தலைவர்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களில் பலர் இத்தகைய இடைவெளிகளை சந்தித்துள்ளனர். காலம் என்னை குணப்படுத்தும். இந்த நேரத்தை ஆன்மீக ரீதியிலும் ஆக்கப்பூர்வமாகவும் மக்களைச் சென்றடைய பயன்படுத்துவேன்.

எனது ட்விட்டர் கணக்கை தடை செய்ய நீண்ட நாட்களாக ஏதோ ஒன்று நடக்கிறதையும் நான் அறிவேன். எப்படியிருந்தாலும், நான் மலிவான தந்திரங்களைக் கையாள்வதில்லை என்று காயத்ரி ரகுராம் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.