கோலிவுட் கியூட் காதல் ஜோடிகளாக வலம் வந்த நயன்தாரா-விக்னேஷ்சிவன் இருவரும் கடந்த கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். பின்னர், வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த விசயத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து மகிழ்திருந்தார். அதுமட்டுமின்றி நயன்தாராவின் பிறந்த நாள் (நவம்பர் 18ம் தேதி) அன்று தன் தன் காதல் மனைவி நயன்தாராவுக்கு க்யூட்டாக கவிதை நடையில் பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவனின் தாயார் மீனாகுமாரி தனது மருமகள் நயன்தாரா குறித்தும் அவர் செய்த உதவிகள் குறித்தும் மனம் திறந்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். மேலும், வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நயன்தாராவின் வீட்டில் சமையல், அயர்னிங், கிளீனிங் போன்ற உதவிகள் செய்வதற்கு மொத்தம் எட்டு பேர் வேலை செய்கிறார்கள். அதில் வீட்டு வேலை செய்யும் ஒரு அம்மா மிகவும் கவலையுடன் சோர்ந்து இருந்தார். அவரை அழைத்து என்னவென்று நலம் விசாரித்த நயன்தார, அவர் நான்கு லட்சம் ரூபாய் கடனில் கஷ்டப்படுவதை அறிந்து உடனே அவருக்கு நான்கு லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார். இதை நான், என் கண்ணெதிரே பார்த்தேன். அந்த அம்மா, நயன்தாராவின் வீட்டில் நீண்ட காலமாக வேலை செய்து கடுமையாக உழைத்தவர். எனவே நயன்தாரா அவருக்கு உதவி செய்தார். நயன்தாராவின் அம்மா கேரளாவில் இருந்து நயன்தாராவின் வீட்டிற்கு வந்தபோது, அந்த வேலைசெய்யும் அம்மாவுக்கு இரண்டு தங்க வளையலே போட்டுவிட்டார்.

அந்த வேலைசெய்யும் அம்மா அவ்வளவு நம்பிக்கையான பணியாளராக இருந்தார். நானும், என்னிடம் வேலை செய்த பெண்ணிற்கு ஐந்து பவுன் நகை போட்டு திருமணம் செய்து வைத்தேன், அவரின் கணவருக்கு வேலையும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அவர்களின் குடும்பதிற்கு நிறைய உதவிகள் செய்துள்ளேன். அதேசமயம் வீட்டில் பணிபுரியம் சிலர், சில தவறுகளையும் செய்துள்ளார்கள். ஆனால், அவர்கள் மீது காவல்துறை சார்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அறிவுரைக் கூறி தவறுகளை சரிசெய்தோம். நம் வீட்டில் பணிபுரியும் பணியாளர்கள் எல்லோரையும் நம்முடைய சகோதரிகளாக நடத்துவோம்.” என்று கூறியுள்ளார்.