மனைவியை கொன்று துண்டு துண்டாய் வெட்டி வீசிய கணவர் – உ.பி.யில் நடந்த கொடூரம்

உத்தரப் பிரதேசத்தில் மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த நவம்பர் 8 ஆம் தேதி அன்று உத்தரப் பிரதேசம் மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள குலாரிஹாவ் பகுதியில், துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதாக ராம்பூர் கலன் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் பெண்ணின் உடல் பாகங்களை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சார்ந்தவர், யார் அவரை கொலை செய்தது என்பது குறித்து விசாரித்து வந்த நிலையில், கொலையான பெண் குலாரிஹாவ் பகுதியை சேர்ந்த ஜோதி என்ற சினேகா என்பது தெரிய வந்தது.

image
இதையடுத்து இந்த கொடூரமான கொலைச் சம்பவம் தொடர்பாக சினேகாவின் கணவர் பங்கஜ் மவுரியா மற்றும் அவரது நண்பர் துர்ஜன் பாசி ஆகிய இருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் தனது மனைவி ஜோதி என்ற சினேகாவை நண்பரின் உதவியுடன் கொலை செய்ததை பங்கஜ் மவுரியா ஒப்புக்கொண்டார். இதுகுறித்து பங்கஜ் மவுரியா அளித்த வாக்குமூலத்தில், ”எனக்கும் எனது மனைவி சினேகாவுக்கும் திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. சினேகாவுக்கு போதைப்பொருள் உட்கொள்ளும் பழக்கம் இருந்தது. மேலும் அவர் ஒரு வேறொரு ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இது எனக்கு பிடிக்கவில்லை. பலமுறை சொல்லியும் அவர் அதை பொருட்படுத்தவில்லை. இதன் காரணமாகவே எனது மனைவியை கொலை செய்தேன்”  என்று கூறினார்.

இதையடுத்து  சினேகாவின் கணவர் பங்கஜ் மவுரியா மற்றும் அவரது நண்பர் துர்ஜன் பாசி ஆகிய இருவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொடூரமான கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.    

இதையும் படிக்கலாமே: ஆயிரக்கணக்கான சிறாரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை விடுவித்த நீதிமன்றம்-பகீர் காரணம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.