திருப்பத்தூர் || பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை..! திமுக நகர மாணவரணி நிர்வாகி கைது..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் திருப்பத்தூர் மாவட்ட நகர பாஜக துணை தலைவர் கலிகண்ணன் மரம நபர்களால் வெட்டி நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்த கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமியின் மகன் கலிகண்ணன். இவர் திருப்பத்தூர் நகர பாஜக துணை தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வேப்பாலம்பட்டி என்ற இடத்தில் வெங்கடேஸ்வரா கிரஷர் என்ற பெயரில் ஜல்லி உடைக்கும் நிறுவனத்தின் அருகில் இன்று காலை ஆள் நடமாட்டம் இல்லா பகுதியில் கொடூரமான முறையில் நேற்று மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஊத்தங்கரை டிஎஸ்பி அமலா அட்வின் தலைமையில் ஊத்தங்கரை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் கலிகண்ணன் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திருப்பத்தூரில் உள்ள தனது வீட்டிற்கு செல்லாமல் தலைமறைவாக வாழ்ந்து வந்ததாக தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த ஊத்தங்கரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஊத்தங்கரை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்த ஹரி விக்னேஷ் என்பவருக்கும் கலிகண்ணனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது. ஹரி விக்னேஷ் திருப்பத்தூர் நகர மாணவரணி நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஹரி விக்னேஷை போலீசார் தேடிய போது அவர் தலைமறைவாக இருந்துள்ளார். இந்த நிலையில் கலிகண்ணன் இறந்து கிடந்த பகுதியில் செல்போன் டவரில் பதிவான சிக்னலை கொண்டு ஆராய்ந்தபோது ஹரி விக்னேஷ் ஓசூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து ஓசூருக்கு விரைந்த ஊத்தங்கரை காவல்துறையினர் அங்கு பதுங்கி இருந்த ஹரி விக்னேஷ், அருண், அருண்குமார், நவீன் ஆனந்தன், மணிகண்டன் ஆகியோரை கைது செய்து ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் ஊத்தங்கரை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தொழில் போட்டியில் முன்விரோதம் காரணமாக கலிகண்ணனை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இருப்பினும் போலீசார் அரசியல் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.