முன்னின்று மனைவிக்கு 2-வது திருமணம் செய்து வைத்த முதல் கணவன்! வாய்பிளந்த ஊர் மக்கள்


இந்தியாவில் மனைவியை அவரின் காதலனுக்கு கணவரே திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

காதல் திருமணம்

பீகார் மாநிலத்தின் மிர்சாபூரை சேர்ந்தவர் விஸ்வஜீத் பகத். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கும் ஆர்த்தி குமாரி என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் காதல் ஏற்பட்ட நிலையில் கடந்த 30ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்த சூழலில் அவர்களுக்கு இடையில் அபிராஜ் என்ற இளைஞர் வந்தார்.
அபிராஜும், ஆர்த்தியும் ஒரு சமயத்தில் காதலித்து பின்னர் பிரிந்திருக்கின்றனர், இதையடுத்து பகத்தை ஆர்த்தி மணந்துள்ளார்.

முன்னின்று மனைவிக்கு 2-வது திருமணம் செய்து வைத்த முதல் கணவன்! வாய்பிளந்த ஊர் மக்கள் | Husband Got His Wife Married To Man Love

newstracklive

எழுந்த சலசலப்பு

இரு தினங்களுக்கு முன்னர் ஆர்த்தியும் அபிராஜும் சேர்ந்து பேசியதை ஊரார் பார்த்துள்ளனர்.
பின்னர் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி இது குறித்து பேசியதையடுத்து ஆர்த்தி, அபிராஜை மணக்க விரும்பினார்.

இது ஊர் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் பகத்தே, தனது மனைவி ஆர்த்தியை அபிராஜுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இப்போது இந்த திருமணம் தான் ஊர் முழுக்க பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.