Whatsapp சோதனை செய்யும் புதிய Voice Status அப்டேட் வசதி!

Meta நிறுவனம் அதன் Whatsapp செயலியில் ஸ்டேட்டஸ் இடையே வாய்ஸ் நோட்ஸ் அனுப்பும் சோதனையை செய்துவருவதாக தெரிவித்துள்ளது. இது தற்போது முதல்கட்டமாக iOS பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

பயனர்கள் தற்போது புகைப்படங்கள், வீடியோ மற்றும் லிங்க் போன்றவற்றை
Whatsapp Status
உள்ளே வைக்கலாம். இந்த புதிய அப்டேட் கிடைத்தால் இனி பயனர்கள் அவர்களின் ஸ்டேட்டஸ் இடையே வாய்ஸ் கிளிப் அல்லது நோட்ஸ் போன்றவற்றை வைக்கலாம்.

இதை iOS Beta வெர்ஷனில் சோதனை செய்துவருவதாக Meta நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வசதியில் பயனர்கள் 30 நொடிகள் இருக்கும் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வைக்கமுடியும். இதை தற்போது
Whatsapp Chat செய்யும்போது
நாம் பயன்படுத்தலாம். விரைவில் இது Status வைக்கவும் பயன்படும்.

இதில் Microphone வசதியும் கிழே இடம்பெற்றுள்ளது. Status வைப்பதற்கு முன்னாள் பயனர்கள் Microphone பட்டனை அழுத்தி அவர்களின் வாய்ஸ் ரெகார்ட் செய்து பின்னர் அதையே ஸ்டேட்டஸ் என்று வைக்கலாம்.

கூடுதலாக அதில் அவர்கள் text சேர்க்கலாம். முக்கியமான நபர்களுக்கு மட்டுமே இந்த ஸ்டேட்டஸ் தெரியும்படி வைக்கமுடிடியும். இவை அனைத்தும் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று Whatsapp நிறுவனம் உறுதியளித்துள்ளது.

iOS தவிர இந்த வசதி
Whatsapp Beta
For Android போன்களுக்கும் வெளியாகும். தற்போதுவரை இந்த வசதி சோதனையில் இருக்கிறது. இதைத்தவிர கூடுதலாக Whatsapp மூலம் Poll நடத்தும் வசதியும் வெளியாகும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.