எலிசபெத் ராணியார் பாதுகாத்துவந்த மரபுகளை உடைக்கும் கமிலா: அரண்மனையில் புதிய பொறுப்புகள் அறிவிப்பு


பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணியாருக்கு உதவியாக செயல்பட்டு வந்த பெண்களின் குழு ஒன்றை கமிலா கலைத்துள்ளதுடன், தமக்கு நெருக்கமான நபர்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்கியுள்ளார்.

மரபுகளை மொத்தமாக உடைத்த கமிலா

இதனால், நூற்றாண்டுகளாக பிரித்தானிய ராஜகுடும்பம் பாதுகாத்துவந்த மரபினை கமிலா மொத்தமாக உடைத்துள்ளதாக கூறுகின்றனர்.
பதிலுக்கு, புதிதாக தமக்கு மிகவும் நெருக்கமான 6 பேர்களுக்கு பொறுப்புகளை வழங்கியும் உத்தரவிட்டுள்ளார்.

எலிசபெத் ராணியார் பாதுகாத்துவந்த மரபுகளை உடைக்கும் கமிலா: அரண்மனையில் புதிய பொறுப்புகள் அறிவிப்பு | Queen Camilla Breaks Tradition Scraps Position

@getty

மறைந்த ராணியாருக்கு உதவியாகவும், ஆலோசகர்களாகவும், தோழியாகவும், வெளிநாட்டு பயணங்களில் உதவிக்கு உடன் செல்பவர்களாகவும் சிறப்பு குழு ஒன்று செயல்பட்டு வந்துள்ளது.

6 பேர்கள் கொண்ட ஒரு அமைப்பு

இது இரண்டாம் எலிசபெத் ராணியாராக முடிசூடிய பின்னர் தமக்கு உதவுவதற்காக அமைத்துக் கொண்ட குழுவாகும்.
தற்போது அப்படியான குழுவின் தேவை இல்லை என குறிப்பிட்டுள்ள கமிலா, அந்த பொறுப்புகளை நீக்கிவிட்டு, வெறும் 6 பேர்கள் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார்.

எலிசபெத் ராணியார் பாதுகாத்துவந்த மரபுகளை உடைக்கும் கமிலா: அரண்மனையில் புதிய பொறுப்புகள் அறிவிப்பு | Queen Camilla Breaks Tradition Scraps Position

@getty

இனி இவர்களே கமிலாவுடன் பணிபுரிவார்கள் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
மேலும், புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்த 6 பேர்களும், ராணியாரின் உதவியாளர் குழுவுக்கு அளிக்கப்பட்டு வந்த அதே ஊதியத்தை பெறுவார்கள் என்றே கூறப்படுகிறது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள 6 பேர்களும் கமிலாவுக்கு நன்கு அறிமுகமானவர்கள் எனவும், நீண்ட காலமாக நட்பில் இருப்பவர்கள் எனவும் கூறப்படுகிறது.
மேலும், மறைந்த ராணியாருடன் பணியாற்றிய மூவர் தற்போதும் பணியில் இருப்பதாகவும், இவர்கள் மன்னர் சார்லசுக்கு உதவியாக செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.