காரைக்குடி: காங்கிரஸ் கட்சியில் 4 பேர் இருந்தாலே 5 கோஷ்டிகளாகச் செயல்படுவர் என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் பேசினார்.
காரைக்குடியில் இளைஞர் காங்கிரஸ் கூட்டம் நேற்று நடந்தது. மாங்குடி எம்எல்ஏ, இளை ஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் லெனின்பிரசாத், மாவட்டத் தலை வர் பிரவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்பி பேசியதாவது: காங்கிரஸில் 4 பேர் இருந்தாலே 5 கோஷ்டி களாக செயல்படுவர். அந்த பழக்கம் தற்போது இளைஞர் காங்கிரஸிலும் தொற்றி விட்டது. மாநில அளவில் இளைஞர் காங்கிரஸில் 7 லட்சம் உறுப்பி னர்கள் உள்ளதாக நிர்வாகிகள் கூறுகின்றனர். அவ்வளவு பேர் இருந் தால், தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைத்து விடும்.
சிவகங்கை மாவட்டத்தில் 12 ஆயிரம் உறுப்பினர்கள் இருப் பதாக கூறுகின்றனர். அதற்கு வாய்ப்பே இல்லை. உறுப்பினர்கள் எண்ணிக்கையை பொய்யாக அதிகரித்து கூறுவது காங்கிரஸ் கட்சியில் மட்டுமில்லை, திராவிட கட்சிகளிலும், ‘மிஸ்டு கால்’ கட்சி யிலும் உள்ளது. கட்சிகள் கூறும் எண்ணிக்கையைக் கூட்டினால் தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கையை விட கூடுதலாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.