சென்னை: பெரம்பலூர், அரியலூருக்கு இரண்டு நாள் பயணமாக நாளை செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இதுதவிர, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதுடன், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.
இந்நிலையில், நாளை திருச்சி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை, நாளை மறுதினம் என இரு நாட்களும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
குறிப்பாக, திருச்சியில், பள்ளி மாணவர்களுக்கான ஸ்டெம் ஆன் வீல்ஸ் என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். மேலும், அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் அகழாய்வு பணிகளையும் முதல்வர் பார்வையிடுகிறார்.