சென்னை அருகே செம்மஞ்சேரி பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் சந்தியா கார்த்திக் தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. இவர்கள் கிண்டி ஐந்து பர்லாங் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் கடந்த மூன்று மாதங்களாக தங்கி வந்துள்ளனர்.
அங்கிருக்கும் குப்பைகளை பொறுக்கி அதை விற்று வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இத்தகைய நிலையில், கார்த்திக் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தினர். சந்தியாவிற்கு முன்னதாக பாண்டியன் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில் அவர் கார்த்திக்குடன் இரண்டு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
மனைவி முதல் கணவரை விட்டுவிட்டு கார்த்திக்குடன் வாழ்ந்து வருவதால் அந்த ஆத்திரத்தில் பாண்டியன் கொன்றிருக்கலாம் என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் பெயரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.